2021 JUNE 1 CURRENT AFFAIRS IN TAMIL

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

2021 ஜூன் 1 நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS REFER FORM 5 NEWS PAPERS & WEBSITES 

1. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வெ. பழனிக்குமார் பதவியேற்றுக்கொண்டார் .

 

2. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆலோசகராக அலபன் பந்தோபாத்யாய நியமிக்கப்பட்டுள்ளார்.

 

3. ஜம்முவில் 20.24 லட்சம் குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா என்ற பெயரில் ஒருங்கிணைந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் 2018 டிசம்பர் 1 ஆம் தேதி ஜம்முவில் தொடங்கப்பட்டது.

 

4. 2020 - 2021 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக சரிந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

5. கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் 650 ஆம்ஃபோட்டெரிசின் B மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

6. அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் COVID தடுப்பூசிக்கு இந்தியாவில் விரைவாக ஒப்புதல் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.

 

7. இந்தியாவில் COVID சிகிச்சைக்காக, ஆக்ஸிஜன் உற்பத்தி உபகரணங்கள் உள்பட கூடுதல் மருத்துவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரான்ஸ் நாடு அறிவித்துள்ளது.

 

8. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறிய போர் கப்பல்கள் உட்பட 108 பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.




9. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் K.V. சுப்பிரமணியன்.

 

10. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

11. லட்சத்தீவின் பொறுப்பு நிர்வாகியாக பிரஃபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டுள்ளவர்.

 

12. பிரிட்டனில் COVID 3 வது அலையின் ஆரம்பநிலை அறிகுறிகள் தெரிவதாக புகழ் பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார்.

 

13. எவரெஸ்ட் சிகரத்தை ஏரிய பார்வையற்ற வீரர் என்ற சாதனையை சீனாவைச் சேர்ந்த ஹாங் காங் என்பவர் படைத்துள்ளார். இவர் எவரெஸ்டில் ஏறிய ஆசியாவைச் சேர்ந்த முதல் பார்வையற்ற வீரர் மற்றும் உலக அளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 3 வது பார்வையற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

14. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பார்வையற்ற வீரர் வெய்ஹென்மயர்தான் (அமெரிக்கா). இவர் 2021 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார்.

 


15. தொலைதூர ஏவுகணைகளை தயாரிக்க தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியுள்ளது.

 

16. புதிதாக 20 ராணுவ பிரிவுகளை உருவாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. NATO படையால் அதிகரித்துவரும் ஆபத்தை எதிர்கொள்ளும் வகையில் ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 ராணுவ பிரிவுகளை தொடங்கியுள்ளது.

 

17. NATO படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அடைக்கலம் வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.


18. இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII) தலைவராக T.V. நரேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

19. வங்கிகள் வழங்கிய உணவு சார் கடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

20. இலங்கையின் தலைநகரான கொழும்புவில் சீனாவின் துறைமுக நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

 

21. ரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்க கிராண்ட் மாஸ்டர் இனியன் (ஈரோடு) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE



You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

1 Comments