2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs.
2020 அக்டோபர் 31 நடப்பு நிகழ்வுகள்
1. இந்தியாவின் முதல்
நீர்வழி விமான போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் தொடங்கி வைத்தார்.
இந்தத் தொடக்க விழாவின் போது சமர்பதி ஆற்றங்கரையில் இருந்து நர்மதை நதிக்கரை வரை மோடி விமானத்தில்
பயணம் செய்தார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த நீர்வழி விமான சேவையை நிர்வகிக்கும்.
2. கொரோனோ வைரஸின் 2 வது அலை பரவலை
தடுக்க பிரான்ஸ் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. புதிய மருத்துவ
கல்லூரிகளை தொடங்க 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை
கட்டாயம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.
4. 2021 - 2026 ஆம் நிதி ஆண்டிற்கான அறிக்கை குறித்த ஆலோசனைகளை 15 வது நிதி ஆணையம் 31.10.2020 அன்று நிறைவு செய்துள்ளது.
15 வது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங்.
5. பள்ளி குழந்தைகள்
இடைநிற்றல் விகிதம் மேற்கு வங்காள மாநிலத்தில் குறைந்துள்ளதாக ASER நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கு வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக செர்ப் பவர் என்ற திட்டத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
7. பெண் பயணிகளின்
பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எனது தோழி என்ற நடவடிக்கையை இந்திய ரயில்வே வாரியம்
தொடங்கியுள்ளது.
எனது தோழி திட்டத்திற்கான அவசர சேவை எண் 182.
8. மடகாஸ்கர் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு பின்
அரிய வகை பச்சோந்தி இனத்தை ஜெர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
9. தகவல் பரிமாற்றத்திற்காக சாய் எனப்படும் ஆண்ட்ராய்டு செயலியை இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது.
10. ஸ்மார்ட் கரும்பலகை
திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
11. இ - தர்ஜி - ஜியோ என்ற வலைதளத்தை வீட்டு வசதி மற்றும்
நகர்ப்புற வாரியங்கள் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
12. 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக காற்று மாசு பதிவாகி உள்ள நாடு இந்தியா.
இந்த ஆய்வை வெளியிட்ட நிறுவனம் GLOBAL AIR 2020.
13. Global Estimate of Children in Monetary Poverty an
Update என்ற அறிக்கையை உலக வங்கியுடன் இணைந்து யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
current affair for today
TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.
0 Comments