2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs.
SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW
2020 நவம்பர் 2 நடப்பு நிகழ்வுகள்
1. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்பட 10 பேர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காற்று தரத்தை மேம்படுத்த மத்திய அரசு 2,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
3. கடந்த ஓராண்டில் 2061 பெண் குழந்தைகள் உள்பட 3531 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் தத்தெடுப்பு ஆதார ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில அளவில் குழந்தைகள் தத்தெடுப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா.
4. ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த கிளைன் விஷன் நிறுவனம் வடிவமைத்துள்ள SPORTS CAR ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் விமானம் ஆக மாறி 1500 அடி உயரம் பறந்து சாதனை படைத்துள்ளது.
5. பிரான்ஸ் நாட்டின் நேன்டஸ் நகரில் நடைபெற்ற அலெக்ஸிஸ் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த கோவிந்த் சிங் பிஷத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
6. பிரான்ஸ் நாட்டின் நேன்டஸ் நகரில் நடைபெற்ற அலெக்ஸிஸ் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை வீரர் சஞ்ஜீத் தங்கப்பதக்கம்வென்றார்.
7. ருமேனியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஜெர்மனி வீரர் மேனுவல் சாம்பியன் பட்டம் வென்றார்.
8. இத்தாலி கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
9. சுகோய் 30 MKI விமானத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக
சோதித்து உள்ளது.
10. கேரள அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதான எஜீதாச்சன் புரஸ்கார் விருதுக்கு பால் சக்கரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
11. கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல வயலின் இசைக் கலைஞர் டி.என். கிருஷ்ணன் காலமானார்.
12. இந்தியாவில் மிகக் குறைந்த அளவு மருத்துவ கட்டணம் வசூலிக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
13. இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
current affair for today
TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.
0 Comments