2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs.
2020 அக்டோபர் 30 நடப்பு நிகழ்வுகள்
REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES
1. குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலைக்கு அருகே மூலிகை தாவரங்கள் நிறைந்த ஆரோக்கிய வனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
2. MBBS உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
3. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு F - 35 ரக விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
4. சீனாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாட்டில் அதிபர் ஷி ஜிம் பிங் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதிபராக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
5. சிறந்த நிர்வாகம் கொண்ட மிகப்பெரிய மாநிலங்களில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்திற்கு 2 வது இடம் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வை நடத்திய அமைப்பு PUBLIC AFFAIRS CENTRE .
6. நாடு முழுவதும் உள்ள 700 அணைகளை பராமரிப்பதற்கு 10,211 கோடி ரூபாயை ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் தலைவர் நரேந்திர மோடி.
7. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் 24 வது மலபார் கடற்படை பயிற்சி வரும் நவம்பர் 3 அன்று விசாகப்பட்டினம் அருகே உள்ள வங்காள விரிகுடாவில் நடைபெற உள்ளது.
8. கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை INS கோரா என்ற கப்பலில் இருந்து இந்தியா வெற்றிகரமாக சோதித்து உள்ளது.
9. மினிட்மேன் - 3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக அமெரிக்க விமானப்படை சோதித் உள்ளது.
10. தகவல் பரிமாற்றத்திற்காக பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்திய ராணுவம் பிரத்தியேக செயலியை அறிமுகம் செய்துள்ளது.
current affair for today
TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.
0 Comments