2020 அக்டோபர் 23 நடப்பு நிகழ்வுகள்
TNPSC, RRB, TNEB, TNUSRB, TNTET, CTET, SI, SSC & tn psc
1. உத்திரபிரதேச மாநிலத்தில் 1535 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.
2. சுற்றுலா துறையை
மேம்படுத்துவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் 26 புதிய சுற்றுலா திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.
3. சிங்கப்பூர் மற்றும்
ஜெர்மனி இடையேயான நேரடி விமான போக்குவரத்து
சேவை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த விமான சேவை பசுமை வழித்தடம் என்று
அழைக்கப்படுகிறது.
4. உள்நாட்டில்
தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு ஊசியான கோவக்சின் 3 வது கட்ட பரிசோதனைக்கு உட்படுத்த தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்
அனுமதி வழங்கியுள்ளார்.
5. பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லூரிகளை வரும் September 17 ஆம் தேதி கர்நாடக மாநில அரசு இழக்க உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா.
6. INS பிரபாலி என்ற கப்பலில் இருந்து பிரித்வி - 2, ருத்ரம் - 1, சவுரியா - 1 மற்றும் நாக் ஆகிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதித்து உள்ளது.
7. ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்களிடம் சோதித்துப் பார்க்க
இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த தடுப்பூசி சோதனையை நடத்த உள்ள நிறுவனம் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்.
8. உலகின் பதிவு பெற்ற
முதலாவது கொரோனா தடுப்பு ஊசி என ஸ்புட்னிக் 5 - ஐ ரஷ்யா அறிவித்துள்ளது
9. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவர் என்ற மருந்தை வழங்க அமெரிக்கா முழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கனது.
10. கொரோனா தொற்று காரணமாக நியூசிலாந்தில் நடக்கவிருந்த உலக ஜூனியர்
பாட்மிண்டன் போட்டி ரத்து
செய்யப்பட்டுள்ளது.
11. 2021 உலக ஜூனியர்
பாட்மிண்டன் போட்டி நடக்க உள்ள நாடு சீனா.
12. உலக திக்குவாய்
விழிப்புணர்வு தினம் அக்டோபர் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.
13. அக்டோபர் 22, 2008 ஆம் ஆண்டில் இந்தியா சந்திரயான் - 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு ஏவி சாதனை படைத்துள்ளது படைத்தது.
0 Comments