2020 அக்டோபர் 8 நடப்பு நிகழ்வுகள்
TNPSC, TNEB, RRB, SSC & AGRI EXAM
1. இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் லூயிஸ் கிளக்கிற்கு வழங்கப்பட உள்ளது.
2. உலகின் மிகவும்
வெப்பமான மாதமாக செப்டம்பர் 2020 பதிவாகியுள்ளது.
3. லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3 1/2 மணி நேரத்தில் பயணிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை ஜெட் ஸ்டார்ட் அப் நிறுவனமான பூம் இயக்க உள்ளது.
4. இந்திய
விமானப்படையின் 88 வது ஆண்டு விழா அக்டோபர் 8 அன்று அனுசரிக்கப்பட்டது.
5. ஆந்திராவில் 43 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 செட் சீருடைகள், பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பள்ளி பைகள் & காலணிகள் போன்றவற்றை இலவசமாக வழங்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
6. போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார்.
7. இந்திய ரிசர்வ்
வங்கியின் புதிய துணை ஆளுநராக ராகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
8. ஸ்பெயின் சர்வதேச தடகள போட்டியில் எத்தியோப்பியா தடகள வீராங்கனை லெடிசென்ட் கிடி 5000 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் பந்தய தொலைவை 14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
9. மத்திய அமைச்சர் மற்றும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
10. காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 4 ஆம்புலன்ஸ் மற்றும் 6 பள்ளி பேருந்துகளை இந்திய அரசு நேபாளத்திற்கு வழங்கியுள்ளது.
11. இந்தியாவின் முதல் மேம்பட்ட உற்பத்தி மையம் தமிழ் நாட்டில் தொடங்கப்பட உள்ளது.
12. உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு ஆலையை SAMSUNG நிறுவனம் உத்தரப் பிரதேசத்தில் அமைக்க உள்ளது.
portal tnpsc, current affairs, current affairs of, current affairs of india, current-affairs, current affairs in india, current affairs in tamil, current affairs in tamil, tnpsc coaching centre salem, tneb ae coaching centre, tnusrb, tn police
0 Comments