2020 OCTOBER 2 CURRENT AFFAIRS IN TAMIL

 


2020 அக்டோபர் 2 நடப்பு நிகழ்வுகள்

 

1. நாட்டின் அனைத்து அரசு பள்ளிகளிலும் நீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் அக்டோபர் 2 அன்று நீர்வளத் துறை சார்பில் 100 நாட்கள் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

 

2. வருவாய் இழப்பை சந்தித்துள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு கூடுதலாக ரூபாய் 7106 கோடி கடன் வாங்கிக் கொள்ள மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

3. சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களுக்கான பாகங்கள் & கருவிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

4. எல்லைப் பகுதிகளில் அதிநவீன பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க் தொடர்பை உருவாக்க 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

5. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 கோடியில் மரபணுவியல் ஆய்வுக் கூடம் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

6. கோல் இந்தியா பொதுத்துறை நிறுவனத்தில் நிலக்கரி உற்பத்தி செப்டம்பரில் 31.6  சதவீதம் அதிகரித்துள்ளது.

 

7. காந்தி அடிகளின் பிறந்த தினம் அக்டோபர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

8. International Day of Non Violence அக்டோபர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

9. பின்லாந்து தலைநகர் ஹெல்சின்குயில் சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் தானியங்கி ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

10. அதிக IPL போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை இந்திய

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments