2020 அக்டோபர் 1 நடப்பு நிகழ்வுகள்
1. ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் ரயிலை இங்கிலாந்து வெற்றிகரமாக சோதித்து உள்ளது.
2. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் 6.5 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
3. MAKE IN INDIA திட்டத்தின் கீழ் சென்னைக்கு அருகில் தயாராகும் க்ளோக் பிஸ்டல் எனப்படும் கைத்துப்பாக்கிகள் 2021 மார்ச் மாதத்திற்குள் தனி நபர்களுக்கான விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. ஒரே நாடு ஒரே
குடும்ப அட்டை திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது.
5. இந்திய ராணுவம் 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க உள்ளது.
6. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்து உள்ளது.
7. வெள்ளி கோளுக்கு விண்கலம் செலுத்தும் ISRO அமைப்பின் திட்டத்தில் பிரெஞ்சு நாடு இணைந்து செயல்பட உள்ளது.
8. உலக சைவ உணவாளர்கள் தினம் அக்டோபர் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.
9. சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1 அன்று
அனுசரிக்கப்படுகிறது.
10. மக்கள் சீனக் குடியரசு தினம் அக்டோபர் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.
11. நடப்பாண்டில் 8.7 % கூடுதல் மழை பொழிவுடன் தென்மேற்கு பருவமழை காலம் முடிவுக்கு வந்துள்ளது.
0 Comments