2020 அக்டோபர் 5 நடப்பு நிகழ்வுகள்
Refer From 5 News Papers & Websites
1. ஈரானில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2. ஹெபடைடிஸ் சி வைரசை கண்டுபிடித்ததற்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் முதல் முறையாக முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையம் என்ற பெருமையை புதுச்சேரி விமான நிலையம் பெற்றுள்ளது.
4. கொல்கத்தாவில் துர்கா பூஜைக்கான திருவிழா காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஃபூல் பாகன் மெட்ரோ ரயில் நிலையத்தை ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
5. நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை செலுத்தும் ஸ்மார்ட் என்ற கருவியை இந்தியா வெற்றிகரமாக சோதித்து உள்ளது.
6. ஒலியின் வேகத்தைவிட அதிவேகமாக செல்லும் டார்பிடோ என்ற ஏவுகணையை இந்தியாவின் DRDO அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
7. உலக வசிப்பிட தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் திங்கட்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
8. உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 5 அன்று
அனுசரிக்கப்படுகிறது.
9. T20 கிரிக்கெட் போட்டிகளில் 9000 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
0 Comments