2020 செப்டம்பர் 4 நடப்பு நிகழ்வுகள்
1. அமெரிக்க பாதுகாப்பு அறிக்கையின்படி மிகப்பெரிய கடற்படையை கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
2. இந்திய கடற்படை மற்றும் ரஷ்ய கடற்படை இணைந்து 11 வது இந்திரா தேவி என்ற கடல் பயிற்சி சமீபத்தில் மேற்கொண்டது.
3. நாட்டின் காரிப் (கோடைகால) பயிர் சாகுபடி பரப்பளவு நடப்பு பருவத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,095.38 லட்சம் ஹெக்டரை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
3. தேசிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துக்களையும் அரசுக்கு வழங்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
4. THE அமைப்பின் உலக பல்கலைக்கழக தரவரிசை 2021 பட்டியலி IISC பெங்களூர் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
THE - TIMES HIGHER EDUCATION
5. குரோஷியா நாட்டிற்கான புதிய இந்திய தூதுவராக ராஜ்குமார் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
6. பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக எஸ். கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
7. 2020 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வங்கி தென்னிந்திய வங்கி.
தென்னிந்திய வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முரளி ராமகிருஷ்ணன்.
8. வினாடிக்கு 100 மெகாபைட் வேகத்தில் இணைய வசதியை வழங்கக் கூடிய தனது 12 வது ஸ்டார்லிங்க் மிஷன் செயற்கைக்கோளை SPACE X நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
9. உலக ஓபன் ஆன்லைன் சேல்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பி. இனியன் வெற்றிபெற்றுள்ளார்.
10. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த எட்டு நாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்களின் சிறப்பு சந்திப்பு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
11. தாது வளங்கள் மற்றும் புவியியல் துறையில் ஒத்துழைப்பு அளிக்க இந்தியா மற்றும் பின்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
12. உலக அறிவுசார் சொத்து அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய புதுமை குறியீட்டு தரவரிசை பட்டியலில் இந்தியா 48 வது இடம் பிடித்துள்ளது.
0 Comments