2020 செப்டம்பர் 3 நடப்பு நிகழ்வுகள்
REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES
1. துபாயில் முதல் முறையாக 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு விசா என்ற புதிய நுழைவு இசைவு திட்டத்தை பிரதமர் சேக் முகமது தொடங்கி வைத்தார்.
2. அமேசான் நிறுவனத்தின் CEO ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் உலகின் பணக்கார பெண்மணிகளில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவரின் சொத்து மதிப்பு 68,000 கோடி அமெரிக்க டாலர்.
உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட நிறுவனம் ப்ளூம்பெர்க் நிறுவனம்.
3. ஸ்ரீ நாராயண குரு பெயரில் நாராயண குரு திறந்தநிலை பல்கலைக்கழகம் கேரளா மாநிலத்தில் அமைய உள்ளது.
கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன்.
4.காந்தி பாரத் சோடா என்ற 15 நாள் பிரச்சாரத்தை மத்திய பிரதேச அரசு
தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தின் மூலம் 178 குடியிருப்புகளில் விழிப்புணர்வு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
378 நகர அமைப்புகளை சேர்ந்த சுமார் 35 லட்சம் பேர் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
5. இந்தியாவில் AK 47 203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்காக இந்தியா & ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
6. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நாகராஜ முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. ரயில்வே வாரியத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக வி.கே. யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
8. ரேணட்டு சோழர் காலத்தைச் சேர்ந்த ஒரு அரிய கல்வெட்டு ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
9. உலகின் பழமையான விமானம் தாங்கி போர்க் கப்பலான INS விராட் குஜராத்தின் அவாங்க் பகுதியில் உடைக்கப்பட்டது
11. ஓய்வு விசா என்ற புதிய விசா திட்டத்தை தொடங்கியுள்ள நாடு துபாய்.
0 Comments