2020 செப்டம்பர் 1 நடப்பு நிகழ்வுகள்
Refer From 5 News Papers & Websites
1. RABOBANK குலோபல் 2020 பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் இந்திய நிறுவனம் அமுல் நிறுவனம்.
2. தொழிலாளர்
சட்டங்களை கத்தார் நாடு சமீபத்தில் திருத்தம் செய்துள்ளது.
இந்த திருத்தத்தின்படி குறைந்தபட்ச மாத ஊதியமாக 25% அதிகரிக்கப்பட்ட 1000 ரியால்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டத் திருத்தத்தின் படி தொழிலாளர்கள் வேறு பணிக்கு மாறுவதற்கு முதலாளியின் அனுமதி பெற தேவையில்லை.
1000 ரியால் என்பது சுமார் 20000 ரூபாய் ஆகும்.
3. டெஸ்லா பங்குகள் உயர்வால் உலக பணக்காரர்கள் பட்டியலில் FACEBOOK இணை நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளி எலோன் மஸ்க் 3 வது இடம் பிடித்துள்ளார்.
4. ஆயுள் காப்பீட்டு
நிறுவனம் (LIC) 64 வருடங்களை நிறைவு செய்துள்ளது.
5. இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பிரம்மோத் சந்திர மோடியின் பதவி காலம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
7. உலக கடித தினம்
செப்டம்பர் 1 அன்று
கொண்டாடப்படுகிறது.
8. ஆகஸ்ட் மாதத்திற்கான GST வருவாய் 86,449 கோடி வசூலிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
9. ASTROSAT விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் மூலம் மிகத் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
10. ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் CII GBA NATIONAL ENERGY LEADER AWARD ஐ பெற்றுள்ளது.
11. உலகின் மிகப்பெரிய சோலார் மரம் துர்காபூரில் (மேற்கு வங்க மாநிலம்) நிறுவப்பட்டுள்ளது.
12. கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிரசாத் பூஷன் என்பவருக்கு உச்சநீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
13. ARMY 2020 என்ற பெயரில் 6 வது சர்வதேச ராணுவ தொழில்நுட்ப மன்றம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
14. ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு சிறந்த எரிசக்தி திறன் பிரிவு விருது வழங்கப்பட்டுள்ளது.
15. தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
0 Comments